Mnadu News

பட்டத்து அரசன் வசூல் எவ்வளவு தெரியுமா?

சற்குணம் இயக்கத்தில் அதர்வா ராஜ்கிரண், ராதிகா, ஆஷிகா ரங்கநாத், ஆர் கே சுரேஷ், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சிறந்த விமர்சனங்களை அள்ளி வருகிறது “பட்டத்து அரசன்”. சண்டி வீரன் படத்துக்கு பிறகு இவர்கள் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.

கபடி விளையாட்டு மற்றும் அந்த வீரர்களின் வாழ்வியல், அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.
ஜிப்ரான் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைத்துள்ளது.

மண் மணம் மாறாத பாடல்கள் மற்றும் காட்சி அமைப்புகள் வசனங்கள் என இப்படம் குடும்ப ரசிகர்களை உற்சாகப்படுத்த செய்த படம் போல உள்ளது. தற்போது வரை இப்படம் ₹1 கோடியை வசூல் செய்துள்ளது.

Share this post with your friends