மதுரை மேலூர் அம்பலக்காரன்பட்டியைச் சேர்ந்த ரமணி கோபால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில், “மேலூர் தாலுகா அம்பலக்காரன்பட்டியில் தனியார் பட்டா நிலத்தை 1994-ஆம் ஆண்டு நானும், என் மனைவியும் வாங்கினோம். அந்த நிலத்துக்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பித்தேன்.பறகு நீதிமன்றம் உத்தரவுபடி,பட்டா வழங்கப்பட்டது.பிறகு பட்டா ரத்து செய்யப்பட்டது.அதன் பிறகு, வருவாய் கோட்டாட்சியர்.அந்த இடம் பஞ்சமி நிலம் இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரருக்கு பட்டா வழங்க உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் வருவாய்த்துறையினர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் நில நிர்வாக ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கிறது. இருவரும் ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More