பட்டினி பிரச்னை தொடர்பாக சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் உணவு பெறுவதில் மக்களளிடையே சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதை சரிசெய்ய தொண்டு அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இது நீண்ட கால தீர்வு அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன் 100 உணவு வங்கிகள் மட்டுமே சேவை செய்து வந்தன. ஆனால் 2021ஆம் ஆண்டு; இந்த எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்தது. கடந்த 2022 செப்டம்பர் புள்ளிவிவரங்களின்படி 97 லட்சம் மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர், உணவுக்காக தொண்டு அமைப்புகளையே சார்ந்து இருக்கின்றனர். பிரிட்டனில் கடந்த மாதம் பணவீக்கம் 8புள்ளி ஏழு சதவீதமாக உயர்ந்த நிலையில், உணவுப் பொருட்களின் விலை 18 சதவீதம் உயர்வை கண்டது. இதனால் பெரும்பாலான பிரிட்டன் மக்கள் வழக்கத்தை விட குறைவான அளவே உணவு பொருட்களை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். என்று ஆய்வு அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More