Mnadu News

பணமதிப்பிழப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு .

நாட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்ய செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்றும் பண மதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள், சரியானதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் விரிவான பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends