Mnadu News

பணவீக்கத்தை மேலும் குறைக்க நடவடிக்கை;: நிதியமைச்சர உறுதி.

மக்களவையில் 2022-23 மானியங்களுக்கான துணை கோரிக்கைகளின் முதல் தொகுதி விவாதத்திற்கு பதிலளிக்கும் போது, மக்களின் நலனுக்காக நாங்கள் பணவீக்கத்தை மேலும் குறைப்போம் என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. இதன் விளைவாக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால், தேக்கநிலை குறித்து அச்சம் வேண்டாம் என்றார்.
நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீத இலக்கை அரசு அடைய முடியும் என்றார். அதே வேளையில் நிதி ஒருங்கிணைப்பு பாதையில் அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
மோடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், செயல்படாத சொத்துக்கள் 2022 மார்ச் இறுதியில் 7.28 சதவீதமாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உலகிலேயே அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் 2023-ஆம் நிதியாண்டில் 3.25 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்க அரசுக்கு அதிகாரம் அளித்த நிலையில், மானியங்களுக்கான துணை கோரிக்கைகளை அவை நிறைவேறியது.

Share this post with your friends