சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல வாரியத்தில் சமையல்காரராக மூர்த்தி என்பவருக்கு சம்பளம் வழங்குமாறு கடந்த 2020 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,இது அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள வாழ்வாதார உரிமைக்கு எதிரானது. சிறப்பு தாசில்தார் நீதிமன்றத்தில் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையும் ஏற்க முடியாது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். உடனடியாக அவர் உயர் நீதிமன்ற ஜுடீசியல் பதிவாளர் முன்பு ஆஜராகவேண்டும். அதன் மீது பதிவாளர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை தந்துள்ள சிறப்பு தாசில்தார் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More