Mnadu News

பண்டிட் சுட்டுக்கொலை: ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம்.

ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தீவிரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்புப் படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில்,அச்சென் பகுதியை சேர்ந்த 40 வயதான சஞ்சய் சர்மா என்ற நபர் தனது மனைவியுடன் காலை 11 மணியளவில் அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த தீவிரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சய் சர்மாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளதால் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதென மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More