Mnadu News

பண பலத்தால் ஆட்சியை திருடிய பா.ஜ.க: பிரியங்கா கடும் தாக்கு.

கர்நாடகாவில் மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, பிரதமர் மோடி இங்கு வந்திருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர்கள் தனக்கு புதைக்குழி தோண்டுவதாக கூறினார். என்ன விதமான பேச்சு இது? நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிரதமரின் உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.எனவே,கர்நாடக மக்கள் எந்தவொரு தலைவரின் வார்த்தைகளையும் நம்பாமல் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும்.அதே நேரம்,கடந்த தேர்தலில் மக்கள் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை தேர்ந்தெடுத்தனர். ஆனால், பா.ஜ.க, பண பலத்தால் ஆட்சியை திருடியது.எனவே, மாநில மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும். 40 சதவீத கமிஷன் அரசு பொதுமக்களை இரக்கமின்றி 1 லட்சத்து 50 ஆயிரம்; கோடியை கொள்ளையடித்துள்ளது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More