Mnadu News

பண வீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளேம்: அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்படவில்லை. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் காங்கிரசார் அளிக்கிறார்கள் என்றார்.
ரூபாய் நோட்டுகளில் கடவுள்கள் உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என டெல்லி முதல் அமைச்சர்; கெஜ்ரிவால் வலியுறுத்தியது தொடரபாக அவர் கூறுகையில், கெஜ்ரிவால், தனது ஊழல்களை பற்றி பேசக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சினைகளை கிளப்புகிறார் என்றார். நீங்கள் டெல்லியில் உள்ள இஸ்லாமிய மதகுருக்களுக்கு ஆண்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறீர்கள். அதேபோல பாதிரியார்கள், குருத்வாரா கிராந்திகள், போதகர்கள் ஆகியோருக்கு வழங்குவீர்களா? உங்களால் ஏன் முடியவில்லை? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More