பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் ஏற்கவே இரண்டு பதக்கங்களை வென்று மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்,தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பினார்.
இதனை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.மேலும் தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர்.இதற்கிடையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து மாரியப்பனை வரவேற்றார்