சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதியை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முக்கியமாக ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்று வள்ளுவர் சொன்னதைப்போல, அம்மாவுக்குத் தான் நீங்கள் பதவி ஏற்பது சந்தோஷமாக இருக்கும். அதை வள்ளுவர் அழகாக கூறியுள்ளார். அவரின் வாக்கு நிஜத்தில் நடக்கும்போது அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என நான் நினைத்துப்பார்த்து மகிழ்கிறேன்.
இந்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அமைச்சர் பதவி எனும்போது பொறுப்பு கூடுகிறது. அந்தப்பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதை கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More