உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நீதி அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,கீழமை நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும்போது சால்வை, நினைவுப்பரிசு, பூங்கொத்து, மாலை, பழங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுக்கக்கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்க சாலையோரத்தில் கீழமை நீதிபதிகள் காத்திருக்கக்கூடாது. பதவி உயர்வு, பணியிடமாற்றம் மற்றும் சலுகைகள் கோரி உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்புகளுக்கு செல்லக்கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதி தனிப்பட்ட பயணம் நீதிமன்ற பணி நேரமாக இருந்தால் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் ஊழியரும், நீதிபதியின் வருகை பணி நேரம் கடந்திருந்தால் புரோட்டாக்கால் பணியை மேற்கொள்ளும் நீதிபதி வரவேற்கவும், வழியனுப்பவும் செல்லலாம். நீதிமன்ற பணி நேரத்தில் எக்காரணம் கொண்டும் கீழமை நீதிபதிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரடியாக கடிதம் அனுப்பக்கூடாது. பதிவுத்துறை வழியாகவே கடிதம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் உடனுக்குடன் சேர்க்கப்படும். கீழமை நீதிபதிகள் வழக்குரைஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்களின் உபசரிப்புகளை பெறக்கூடாது. இதற்கு தடை விதிக்கப்படுகிறது.என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More