மாநாடு வெற்றி தந்த உத்வேகம்:
மாநாடு படத்துக்கு முன், பின் என சிம்புவின் கலை வாழ்வை பிரிக்கலாம். சில வருடங்களாக சரியான படங்களை கொடுக்காமல் இருந்து வந்த சிம்புவுக்கு
ஒரு மாபெரும் கம் பேக் படமாக அமைந்தது. இப்படத்தின் மூலம் வெங்கட் பிரபு, எஸ் ஜே சூரியா, சிம்பு ஆகிய மூன்று பேரின் மர்கெட்டும் உச்சத்தை தொட்டது.

தொடர் வெற்றி :
மாநாடு படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு சிம்புக்கு அடுத்த திருப்புமுனை படமாக அமைந்தது வெந்து தணிந்தது காடு, ஒரு மாறுபட்ட கதை களத்தில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைந்து கலக்கி இருப்பார்கள்.

அடுத்த பட தேர்வுகளில் கவனம் :
இந்த இரண்டு பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பிறகு சிம்பு மீண்டும் ஒரு மாறுபட்ட படத்தை தேர்வு செய்து நடித்து முடித்துள்ளார். ஆம், “ஜில்லுனு ஒரு காதல்” இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு காங்கஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது “பத்து தல”. ஸ்டுடியோ கிரீன் பிரம்மாண்ட தயாரிப்பில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், ஜாய் மல்லூரி ஆகியோர் நடித்து உள்ளனர்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு :
இன்று மாலை பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
