கோவையில் முழு அடைப்புக்கு தடை கோரிய வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கோவையில் முழு அடைப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்றும், செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More