தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தக் கடுமையான பனிப்பொழிவால் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முற்றிலும் மறைந்துள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால், தஞ்சைக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாவுக்கு வந்த நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More