Mnadu News

‘பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தொடர்கிறது’: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு கோவா நகரில் இரண்டாவது நாளாக நடந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை வரவேற்ற சில நிமிடங்களில்,அந்தக் கூட்டத்தில் யாரையும் குறிப்பிடாமல் பேசியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,”உலகமே கோவிட் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொண்டு வரும் வேளையில், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களும் தடையில்லாமல் தொடர்கின்றன. அதில் இருந்து நமது பார்வையை அகற்றுவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது என்று நாம் நம்புகிறோம். எனவே எல்லை தாண்டிய பங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends