Mnadu News

பயணிகள் ரயிலால் லாபம் இல்லை: ரயில்வே இணை அமைச்சர் தகவல்.

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதே இதற்கு உதாரணம் என்று ஏழை பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்
தினசரி பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு எந்த லாபமும் கிடைப்பது இல்லை. ஒரு ரூபாய் செலவு செய்தால் 55 பைசா நஷ்டமாகிறது. ஆனால் மோடி அரசு லாபத்துக்காக வேலை செய்யவில்லை. மக்களின் வசதிக்காக இதுபோன்ற சேவைகளை இயக்கி வருகிறது. பயணிகள் ரயிலை இயக்குவதால் ஏற்படும் நஷ்டத்தை, சரக்கு ரயில் சேவை, மற்ற வருவாய் மூலம் சரிகட்ட முயற்சி செய்கிறோம் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறி உள்ளார்.

Share this post with your friends