காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை அப்பகுதி கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் நூறாவது நாளான நேற்று இரவு ஏகனாபுரத்தில் குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் உட்பட கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More