Mnadu News

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்: தங்கம் தென்னரசு விளக்கம்.

சென்னைக்கு அடுத்து பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதோடு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக இதவரை 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்துவதிலும், பரந்தூர் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் தமிழக அரசு கவனத்துடன் இருக்கிறது என்றார் தங்கம் தென்னரசு. பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர், சென்னை மட்டுமைன்றி திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களிலும் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends