தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக விழுப்புரம் – திருப்பதி இடையிலான விரைவு ரயில் ஜூன் 18-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.அதன்படி வண்டி எண் 16854- விழுப்புரம் – திருப்பதி விரைவு ரயில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி- திருப்பதி இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மறுமார்க்கத்தில் வண்டி எண் 16853, திருப்பதி – விழுப்புரம் விரைவு ரயில், திருப்பதியிலிருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடியிலிருந்து விழுப்புரம் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More