பிரிட்டன் நாட்டின் அவசரகால பட்ஜெட் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ரிஷி சுனக்கின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் முடிவு தவறானது என எதிர்க்கட்சிகள், கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே மிக முக்கியமான மாநாட்டில்; கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More