Mnadu News

பருவநிலை மாற்ற விவகாரம்:3 வது ஜி20 நிலையான நிதி செயற்குழு கூட்டம் தொடங்கியது.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது. இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது குறித்தும், நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துவது குறித்தும், சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Share this post with your friends