தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் அதாவது பிடிஐ கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்தாண்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.அதன்பிறகு, பயங்கரவாதம், மதநிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டது, வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இஸ்லாமாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார்.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினர் அந்த வளாகத்தில் கைது செய்தனர்.அதையடுத்து, இம்ரானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாகாணங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.அதைத்தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More