Mnadu News

பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு:திரும்பப் பெறப்பட்ட பசு அணைப்பு நாள் அறிவிப்பு.

காதலர் தினத்தன்று பசு அணைப்பு நாள் கடைப்பிடிக்கப்படும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.அதோடு, இந்திய விலங்குகள் நலவாரியம், வேண்டும் என்றே காதலர் தினத்தன்று பசு அணைப்பு நாளை அறிவித்திருப்பதாகவும் புகார் எழுந்தது.பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ என்ற அறிவிப்பை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற்றது.

Share this post with your friends