Mnadu News

பள்ளியில் டீச்சருக்கும் மாணவர்களுக்கும் வினோத போட்டி

பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் நக்கி கொள்ளும் போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் கென்னிவிக்கில் உள்ள டெசர்ட் ஹில்ஸ் என்ற நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும், கண்ணாடி திரையின் எதிரெதிர் பக்கங்களில் நின்று கொண்டு, ஒருவரை ஒருவர் நாவால் நக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில், மாணவர்களும் ஆசிரியர்களும் மாறி மாறி கண்ணாடியை நோக்கி ஓடிவந்து நக்குவதை சக மாணவர்கள் கூச்சலிடுட்டு ஆரவாரம் செய்கின்றனர்.கடந்த மார்ச் 31 அன்று இந்த நக்கும் போட்டி நடந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Share this post with your friends