தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நரிக்குறவர்கள், குருவிக்காரரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன். எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக நாடாளுமன்ற மக்களவையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். நரிக்குறவர் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More