கர்நாடாகவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சித்ரதுர்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது,மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தாய் மொழிகளில் பயிற்றுவிக்க பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அதோடு பழங்குடியின மாணவர்களுக்காக 400க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. அனால், பழங்குடியின மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகக் குறைந்த பட்ஜெட்டை ஒதுக்கியது, அதேசமயம் பாஜக இதனை 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More