பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்கார் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் 2 நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ரோப்கார் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More