கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. விசா புதுப்பிக்காமல் சீன பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்ததற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பிடிஐ செய்தி முகமையின் பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டுமே சீனாவில் தற்போது உள்ள நிலையில் அவரை இந்த மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More