அமெரிக்காவில் கடந்த 1973- இல் பிறந்தவர் ஃபிராங்க். கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 1996 வரை மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்தார் ஃபிராங்க். இந்தத் தொடர் இளைஞர்களிடம் மிகவும் புகழ்பெற்றது. முதலில் கிரீன் ரேஞ்சராக நடித்தார் ஃபிராங்க். இந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு அளித்ததால் ஒயிட் ரேஞ்சராகவும் குழுவின் தலைவராகவும் மாற்றப்பட்டார். அந்தத் தொடரில் மொத்தமாக 123 எபிசோட்களில் அவர் நடித்தார். ஃபிராங்க், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஃபிராங்குக்கு முதல் திருமணத்தில் மூன்று குழந்தைகளும் 2-வது திருமணத்தில் ஒரு குழந்தையும் உள்ளார்கள்.
இந்நிலையில் ஃபிராங்க் மறைந்துவிட்டதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவர் எப்போது, எதனால் இறந்தார் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபிராங்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More