Mnadu News

பாகிஸ்தானில் கனமழை: மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை, பருவமழைக்கு முந்தைய காலம் தொடங்கியுள்ளதாகவும் வரும் 30ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends