Mnadu News

பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை

பஞ்சாபில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.இந்த ட்ரோன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஷைத்பூர் கலான் கிராமத்தின் புறநகரில் மீட்கப்பட்டது.அதேபோல்,பஞ்சாபின் டர்ன்-தரண் மாவட்டத்தில் உள்ள ராஜோக் கிராமத்தின் புறநகரில் எல்லைப் பாதுகாப்புப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு ட்ரோன்,ராஜோகே கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து பஞ்சாப் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது.இதையடுத்து, சர்வதேச எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this post with your friends