ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. பின்னர் அண்டை நாடுகளின் உதவியுடன் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் கோதுமை, பால் பொருட்கள், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறை நெருக்கடியால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை பாகிஸ்தான் ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது.அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல், அவர்கள் பெற கூடிய நிதி உதவி அனைத்தும் பாகிஸ்தானின் ராணுவ உயரதிகாரிகளின் கைக்கே போய் சேருகிறது என ஐ.எம்.எப். குறிப்பிட்டு உள்ளது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More