சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவினர் அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக் கொள்ள வேண்டும். கட்சியில் இணைவதை காழ்ப்புணர்சியோடு அணுகக் கூடாது. அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர். யாரையும் நாங்கள் இழுக்கவில்லை.அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர். அதிமுக கண்ணாடி அல்ல் சமுத்திரம்; அந்த சமுத்திரம் மீது கல்வீசினால் கல் காணாமல் போய்விடும்.பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஓப்பிட்டு பேசக்கூடாது. ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி துப்பாக்கி சுடும் பயிற்சியில் யானைகள் பலி:வருத்தம் தெரிவித்த ராணுவம்.
மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில்...
Read More