Mnadu News

பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இந்திய பிளவுபட்டுள்ளது: பா.சிதம்பரம் கடும் தாக்கு.

பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தை முன்மொழியும் போது, ஒரு நாட்டையே, ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். அவரது ஒப்பீடு சரியாகத் தோன்றினாலும், யதார்த்தம் மிகவும் மாறுபட்டது.பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால், மேலும் மேலும் பிளவுகள் ஏற்படும். என்று பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends