Mnadu News

பாஜகவின் தோல்வி-பிரதமர் மோடியின் தோல்வி: பூபேஷ் பாகல் விமர்சனம்.

கர்நாடக சட்டப்பேரவைத் தெர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகல் தனது வீட்டுக்கு வெளியே தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளன. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எனவே இது பிரதமர் மோடியின் தோல்வி. பஜ்ரங்பலி யார் பக்கம் நின்றார் என்பது இப்போது தெரிந்திருக்கும். அவரது கதாயுதம் ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்துள்ளது. மோடியின் புகைப்படங்கள் டிவி சேனல்களிலிருந்து மறையத் தொடங்கியதுமே கர்நாடக தேர்தல் முடிவுகளை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.” என்று கூறி உள்ளார்.

Share this post with your friends