Mnadu News

பாஜகவின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது: டி.ராஜா கருத்து.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். ஆனால், அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக தேர்தல் ஒரு நம்பிக்கையை நிச்சயமாக கொடுக்கும். எனவே இனிவர இருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு நம்பிக்கையோடும் எழுச்சியோடும் செயல்படுவதற்கு கர்நாடக மாநில மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மிக பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறி உள்ளார்.

Share this post with your friends