நெல்லையில் திருமண விழா ஒன்றில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவில் மட்டும் சாமானியர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்;பயிர் இழப்பீடு விவகாரத்தில் திமுக, எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசுகிறது. அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது.அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது.அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி தொடரும் என்றார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More