Mnadu News

பாஜக அடிப்படையிலேயே காந்தியத்துக்கு எதிரானது: ராஷ்டீரிய ஜனதா தளம் விமர்சனம்.

2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள கீதா பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதைப் பெறுவதன் மூலம் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஹிந்து மதவாத கொள்கைகளைப் பரப்பும் கீதா பத்திரிகைக்கு காந்தி அமைதி விருது அறிவித்ததற்கு, ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் எம்பி மனோஜ் குமார் ஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பாஜக அடிப்படையிலேயே காந்தியத்துக்கு எதிரானது. அத்தகைய அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். கீதா பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ள காந்தி விருது, சாவர்க்கர் மற்றும் கோட்சேவுக்கு வழங்கப்படுவதைப் போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends