Mnadu News

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; ‘எங்கள் தைரியத்தை குறைத்துவிடலாம் என்று நினைத்து விட வேண்டாம்’ – அண்ணாமலை

கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

கோவை, கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணைக்கடை ஒன்றின் மீது மண்ணென்னை குண்டு வீசப்பட்டுள்ளது. மண்ணென்னை குண்டு வீச்சால் தீப்பிடித்த நிலையில் கடையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Share this post with your friends