Mnadu News

பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்; முதலமைச்சர் ஸ்டாலின்

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- புகழ்பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில், 27 சதவீதம் பேர் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். ‘சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More