Mnadu News

பாஜக ஆட்சியில் ஒரு அங்குல நிலத்தை கைப்பற்ற முடியாது: அமித்ஷா பேச்சு.

நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் வெளிநாட்டு பங்களிப்பு குறித்த கேள்விகளைத் தவிர்ப்பதற்காக எல்லைப் பிரச்னையை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பியதாகக் கூறினார்.
ராஜீவ் காந்தி அறக்கட்டளை, சீன தூதரகத்திலிருந்து ரூ.1.35 கோடி பெற்றதாக அவர் குற்றம் சாட்டினார். இது வெளிநாட்டு பங்களிப்பு விதிகளின்படி இல்லாததால் அதன் பதிவு ரத்து செய்யப்பட்டது என்றார்.
நேரு சீனா மீது கொண்ட அன்பின் காரணமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர இடம் தியாகம் செய்யப்பட்டது.
இந்திய வீரர்களின் வீரத்தை அவர் பாராட்டினார்.
நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, எங்களின் ஒரு அங்குல நிலத்தையும் யாராலும் கைப்பற்ற முடியாது என்று ஷா கூறினார்.

Share this post with your friends