பாஜக ஆளும் மாநிலங்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டன என்று பழனிவேல் தியாகராஜன் கூறி உள்ளார். சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரஙகில் முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாடல் இந்தியாவிற்கான பாடம் என்ற தலைப்பில் கலந்துரையாடிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது மத்திய அரசுத் திட்டங்களில் பிரதமரின் பெயர் இடம்பெறுகிறது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. ஆனால் மாநில அரசுகள் எஞ்சிய 80 சதவிகித நிதியை வழங்குகின்றன. இப்படி இருக்கும்போது பிரதமரின் பெயர் எப்படி அந்தத் திட்டங்களில் இடம்பெறுகிறது? “,இந்தக் கேள்விகளை முன்பு நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். ஆனால், தற்போது வடமாநிலங்களிலுள்ள அரசுகளும், பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணிகளுமே இந்தக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டன.ஜனநாயகத்தில் இதை நான் ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன்” என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More