Mnadu News

பாஜக ஐடி பிரிவிலிருந்து 13 நிர்வாகிகள் விலகல்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்து இரண்டு நாள்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார்.அவரைத் தொடர்ந்து, பாஜக அறிவுசார் பிரிவு மாநில முன்னாள் செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் பி.திலீப் கண்ணன், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் அம்மு (எ) ஜோதி, திருச்சி புகர் மாவட்ட துணைத் தலைவர் டி.விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து இன்று காலை பாஜகவின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் லதா, தாம்பரம் ஒன்றிய உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் வைதேகி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் ஒரத்தி.அன்பரசு தலைமையில் 10 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் 2 மாவட்டத் துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகுவதாகவும், சி.டி.ஆர். நிர்மல் குமார் வழியில் அதிமுகவில் இணையவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.இரு கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends