நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. அறிவித்துள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானபோது மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.