மத்தியப் பிரதேசத்தில் பாஜகவிலிருந்து யாதவேந்திர சிங் யாதவ் என்பவர் கடந்த மார்ச் மாதத்தில் காங்கிரஸில் இணைந்தார். அவரைத் தொடாந்து,கடந்த ஜூன் மாதத்தில் பாரதிய ஜனதா தலைவரான வைஜ்நாத் சிங் யாதவும் காங்கிரஸில் இணைந்தார்.அதே போல்,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரும் சிவபுரி மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவருமான ராகேஷ் குமார் குப்தா, திங்கள்கிழமை பெரியளவில் கார்களின் அணிவகுப்புடன் 2 ஆயிரத்துக்கும்; அதிகமான தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார். ராகேஷ் குமார் குப்தாவின் வருகை மூலம் சிவபுரி வணிக சமுதாயத்தின் ஆதரவைத் திரட்ட முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More