இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பை அடுத்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜே. ஆஸ்டின் ஐஐஐ ஆகியோர் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். குறிப்பாக பாதுகாப்புத் துறையில் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண்பது தொடர்பாக ஆலோசித்தனர்.அதோடு, ஏற்கெனவே உள்ள மற்றும் புதிய பாதுகாப்புத் தளவாடங்களை இணைந்து உற்பத்தி செய்யவும், இரு நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்க-இந்திய பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு இரு நாடுகளின் கொள்கை எந்த திசையில் இருக்கும் என்பதை காட்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More