ஒக்கி புயலின் போது பாதை மாறி வந்த “சினேரியஸ் கழுகு” கடந்த 5-வருடங்களாக கன்னியாகுமரி மாவட்டம் உதயகிரி கோட்டையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் முழு உடல் தகுதி பெற்ற அந்த கழுகை சொந்த வாழ்விடமான ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக கழிந்த 5-மாதங்களாக வனத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்த கழுகை சொந்த வாழ்விடத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுவாக விமானங்களில் செல்ல பிராணிகள் மட்டுமே எடுத்து செல்ல முடியும் என்பதால் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகவும் உதயகிரி கோட்டையில் இருந்து ஏசி கார் மூலம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நாளை தேதி மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழு அந்த கழுகை ஏர் இந்தியா விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு சென்று ஜோத்பூர் வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்றும் கழுகின் செயன்பாடுகளை கண்காணிகக் சிறகில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்றும் கூறினார்.
முன்னதாக சொந்த ஊருக்கு இன்று மாலை எடுத்து செல்லப்படும் கழுகுக்கு உயிரியல் பூங்கா ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்ததோடு எடுத்து செல்லும் காருக்கு கற்பூரம் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.