ரஜனிகாந்த், மனிஷா கொய்ராலா, சுஜாதா, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்து 2002 ஆம் வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த படம் “பாபா”.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, தயாரித்து இருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்பை பெற்றன. ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தவறியது.

20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாபா படத்தை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றது போல தரம் ஏற்றி வெளியிட ரஜினி தீர்மானித்து சில காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தை குறைத்து, கிளைமேக்ஸை மாற்றி வெளியிட்டார்.

இந்த வெர்சனை அனைவரும் கொண்டாடி ரீ ரீலீஸ் ஆன பாபா படத்துக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்து வசூலை குவிக்க வைத்துள்ளனர்.
தற்போது வரை பாபா நியூ வெர்ஷன் ₹1 கோடியை வசூல் செய்துள்ளது.