Mnadu News

பாம்பன் பாலத்தில் வரும் 31 வரை ரயில் சேவை நிறுத்தம்.

பாம்பன் பாலம் வழியேயான ரயில் போக்குவரத்தின் போது, பாலத்தில் இருந்து வழக்கமான அளவை விட அதிகமான அளவில் அதிர்வுகள் ஏற்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், நேற்று காலி பெட்டிகளை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.இதனைத் தொடர்ந்து, வரும்; 31ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends